BCCI கலாட்டா !
நடக்கவிருக்கும் BCCI பதவிகளுக்கான "ஜனநாயக" போட்டி குறித்தும், அது சம்மந்தப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள் குறித்தும், சம்மந்தப்பட்டவர்களின் அறிக்கைகள் குறித்தும், ஊடகங்கள் இந்த விடயத்தை ஊதிப் பெரிதாக்குவது குறித்தும் தொடர்பாக நடந்தேறி வரும் கூத்துகள் பொதுவாக ரசிக்கும்படியாக இருந்தாலும், இவற்றிலிருந்து ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது!
டால்மியா, IS.பிந்த்ரா, பவார், ·பரூக் அப்துல்லா, துங்காப்பூர், மகேந்திரா மற்றும் அவர்களுக்கிடையே நடக்கும் power struggle-ஐ வரிந்து கட்டி பதிவு செய்யும் ஊடகவியலாளர்கள் ஆகிய யாருமே பெரிய யோக்கிய சிகாமணிகள் கிடையாது. அவரவருக்கு இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் / கிடைக்கப்போகும் ஆதாயமே பிரதானம் !
இவற்றையெல்லாம், ஈ போவது தெரியாமல் வாயைப் பிளந்து 'ஆ'வென்று பார்த்துக் கொண்டிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் தான் சூப்பர் கோமாளிகள்! இவர்கள் இப்போதைக்கு திருந்தப் போவதும் இல்லை! உடனே பாயாதீர்கள்! என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன் :-)
என்றென்றும் அன்புடன்
பாலா
*165*
3 மறுமொழிகள்:
இவற்றையெல்லாம், ஈ போவது தெரியாமல் வாயைப் பிளந்து 'ஆ'வென்று பார்த்துக் கொண்டிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் தான் சூப்பர் கோமாளிகள்! ///
SUPER BALA...
Politics ...... Cinema ...... next Cricket in the list! ...
Now this politics is into the team also. No wonder Greg is geting pissed off.
BTW, Bala you are from which batch from GCT?
JVC,
நான் GCT யில் 1982-86 இல் பொறியியல் பயின்றேன்.
Post a Comment